business

img

கொரோனா கட்டுப்பாடுகளால் சரிந்த தொழிற்துறை உற்பத்தி... மார்ச் மாதத்தில் பிஎம்ஐ 55.4 புள்ளிகளாக குறைந்தது...

புதுதில்லி:
கடந்த 7 மாநிலங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி குறைந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற் றின் 2-ஆவது அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த அதிகப்படியான கட்டுப்பாடு
களை விதிக்குமாறு, மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உட்பட நாட்டின் பலபகுதிகளில் புதிதாக பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது இந்திய வர்த்தகச் சந்தையிலும், தொழிற்துறை உற்பத்தியிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பும் ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் ஐஎச்எஸ் மார்கிட் (IHS Markit), 2021 மார்ச் மாதத்திற்கான இந்திய தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டை (Purchasing Managers’ Index - PMI) வெளியிட்டுள்ளது. இதன்படிமார்ச் மாதத்தில் இந்தியாவின் பிஎம்ஐ குறியீடு 55.4 புள்ளிகளாகக்குறைந்துள்ளது. 2020 பிப்ரவரி மாதம் பிஎம்ஐ குறியீடு 57.5 புள்ளிகளாக இருந்த நிலையில், அது தற்போது சரிவைச் சந்தித்துள்ளது. 2020 ஜூலை மாதத்திற்கு பிந்தைய, 2021 பிப்ரவரி வரையிலான கடந்த 7 மாதங்களில், நாட்டின் தொழிற்துறை உற்பத்தி மிகவும் சிறப்பாகவே இருந்து வந்தது. ஆனால், கொரோனா தொற்றின் 2-ஆவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், அது 55.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. மார்ச் மாத காலகட்டத்தில் இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான வெளிநாட்டு ஆர்டர்களைப் பெற்றுஇருந்தாலும், கொரோனா தொற்று மற்றும் மந்தமான உள்நாட்டுத்தேவை மற்றும் உற்பத்தி அளவீடுகள் ஆகியவற்றின் காரணமாகப்பிஎம்ஐ குறியீடு சரிவடைந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்திலும் தொடரும் என்று கூறப்படுகிறது. 

மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் பகுதி பகுதியாக அறிவிக்கப்பட்டு வரும் பொதுமுடக்கம் மூலம் ஏப்ரல் மாதம்நாட்டின் உற்பத்தி அளவீடுகள் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 5 மாநில தேர்தலும், ஆட்சி
மாற்றம் குறித்த அதிர்வுகளும் நாட்டின் வர்த்தக வளர்ச்சியை மந்தமாக்கலாம் என்று பொருளாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

;